“ஆற்றல் திறன் மிக்க மொழி” – தமிழ் மொழிக்கு புகழாரம் சூட்டிய ஆனந்த் மஹிந்திரா!

0
31

மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா செம்மொழியான தமிழ் மொழிக்கு தனது ட்வீட் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். அந்த ட்வீட்டில் தமிழ் மொழி ஆற்றல் திறன் மிக்க மொழி எனவும் சொல்லி உள்ளார். உதகமண்டலத்தில் உள்ள லவ்டேல் பகுதியில் அமைந்துள்ள லாரன்ஸ் பள்ளியில் தனது பள்ளி படிப்பை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
image
“தமிழ் மொழி ஆற்றல் திறன் மிக்க மொழி. உதாரணமாக உங்கள் விளக்கத்தை கேட்கவும், உங்கள் பார்வையை புரிந்து கொள்ள எனக்கு நேரம் இல்லை. நீங்கள் என்னை தனியாக விட்டால் அதற்காக நான் உங்களை பாராட்டுவேன் என ஆங்கிலத்தில் சொல்வதை தமிழ் மொழியில் ‘போடா டேய்’ என்று சொன்னால் போதும்.

image
நான் தமிழ்நாட்டில் பள்ளி படிப்பை பயின்ற போது எனது நண்பர்களிடமிருந்து நான் முதன்முதலில் கற்ற சொற்றொடர் இதுதான். இதனை எனது வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு தறுவாயில் பயன்படுத்தி உள்ளேன். சில நேரங்களில் அதனை உரக்க சொல்லி உள்ளேன். ஆனால் அது என மூச்சு காற்றுக்கு கீழ் இருக்கும்” என சொல்லி உள்ளார் அவர்.

Source Puthiyathalaimurai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here