ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் பொங்கல் வழிபாடு

0
15

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் பொங்கல் வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சூரிய பகவான்.

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் பொங்கல் விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயில் திருஞானசம்மந்தரால் தேவாரம் பாடப்பெற்ற சிறப்புடையது.
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகாரதலம்.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் பொங்கல் திருநாள் வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக , ஆராதனைகள், அலங்காரம் நடந்தது.

சூரிய பகவானுக்கு பகல் 12 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு, செங்கரும்பு, சர்க்கரை பொங்கல் படைத்து நிவேதனம் செய்தனர். மகாதீபாராதனையும் காட்டப்பட்டது. தமிழக அரசின் கரோனா வழிகாட்டல்படி பூஜைகள் நடந்தது.

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயிலில் பொங்கல் வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சூரிய பகவான்.

Source Dinamani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here