இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.64 லட்சம் பாதிப்பு: 1,09,345பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்; 315 பேர் உயிரிழப்பு

0
24

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 2.64 லட்சத்தை நெருங்கியது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.85 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.65 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,64,202 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,65,82,129 ஆக உயர்ந்தது.

* புதிதாக 315 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,85,350 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,09,345பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,48,24,706 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12,72,073 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* குணமடைந்தோர் விகிதம் 95.20% ஆக குறைந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 3.48% ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் 1,55,39,81,819 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 73,08,669 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Source Dinakaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here