இந்தியா ஓபன் பேட்மிண்டன்- லக்சயா சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்

0
13


நெதர்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் லோவிடம் தோற்ற லக்சயா சென், இந்த தொடரில் வெற்றி பெற்று சாதனை படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறார்.

புதுடெல்லி:

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்ற லக்சயா சென், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், மலேசிய வீரர் நிக் சீ யாங்குடன் மோதினார். இப்போட்டியில் 19-21 21-16 21-12 என்ற செட்கணக்கில் லக்சயா சென் வெற்றி பெற்றார்.  நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கீன் யீவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

5ம் தரநிலை வீரரான லோ கீன் யீவ், அரையிறுதி ஆட்டத்தில் கனடாவின் பிரையன் யாங்குடன் விளையாடுவதாக இருந்தது. ஆனால், தொண்டை வலி மற்றும் தலைவலி காரணமாக பிரையன், போட்டியில் இருந்து விலகினார். இதனால் லோ கீன் யீவ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

நெதர்லாந்து ஓபன் இறுதிப் போட்டியில் லோவிடம் தோற்ற லக்சயா சென், இந்த தொடரில் அவரை வீழ்த்தி சாதனை படைக்கும் உத்வேகத்துடன் களமிறங்குகிறார். இதுவரை இருவரும் 4 முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர். இருவரும் தலா வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளனர். 


https://www.youtube.com/watch?v=videoseries

Source Maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here