கொரோனா பாதித்தவரை மருத்துவ பரிசோதனையின்றி வீட்டில் தனிமைப்படுத்த கூடாது – தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

0
14


அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னை:

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநில மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உரிய மருத்துவ பரிசோதனை இல்லாமல் கொரோனா பாதித்தவரை வீட்டு தனிமைக்கு அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

அடுத்த அலையில் இறப்பை பெருமளவில் குறைக்க வேண்டும். யாரை பரிசோதிக்க வேண்டும், யாரை பரிசோதிக்க வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர். கொடுத்துள்ள வழிகாட்டுதல்களை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.  நோய் அறிகுறி இல்லாதவர்களை பரிசோதிக்க வேண்டாம். தொற்று உறுதியாகும் நபர்கள் தொடர்புடைய இடங்களில் கூடுதல் கவனம் தேவை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source Maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here