“சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்…” – மனம் திறந்த நாக சைதன்யா

0
21
நடிகர் நாக சைதன்யா – நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்தனர். சமீபத்தில் இருவரும் தாங்கள் பிரிவதை உறுதி செய்தனர். இந்தநிலையில் இந்த முடிவை அறிவித்த பிறகு முதன்முறையாக நாக சைதன்யா சமந்தா குறித்துப் பேசியிருக்கிறார். நாக சைதன்யா நடித்து மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் பங்கராஜு படத்தின் வெளியீட்டிற்கு தயாராகி வரும் நாக சைதன்யா, சமீபத்தில் பத்திரிகையாளர்களுடன் உரையாடியபோது சமந்தா ரூத் பிரபுவிடமிருந்து பிரிந்தது குறித்து மனம் திறந்தார். நாக சைதன்யா மற்றும் சமந்தா அக்டோபர் -6, 2017-ல் கோவாவில் திருமணம் செய்துகொண்டனர்.
சமந்தா - நாக சைதன்யா
சமந்தா – நாக சைதன்யா
நான்கு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் அக்டோபர் -2, 2021-ல் தங்கள் பிரிவை அறிவித்தனர். இதனால் அவர்களின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் வலைத்தளங்களில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து பெரும் பேசுபொருளாக மாறியது. விவாகரத்து குறித்து ஏதும் கருத்து சொல்லாமல் மௌனமாக இருந்த நாக சைதன்யா தற்போது அவர் இந்தியன் எக்ஸ்பிரஸுடன் சமீபத்தில் உரையாடியபோது சமந்தா ரூத் பிரபுவிடமிருந்து பிரிந்தது குறித்து கூறியபோது “அந்தச் சூழ்நிலையில் அது சரியான முடிவாக இருந்தது. மேலும் அவர் கூறியது சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன் என கூறியிருந்தார்.

Source Vikatan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here