நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்

0
18

புதுடெல்லி: நீட்-யுஜி படிப்பிற்கான கவுன்சிலிங் தேதி மாற்றப்பட்டு வரும் ஜனவரி 19 முதல் தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இதுபற்றி அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “அன்புள்ள மாணவர்களே, நீட்-யுஜிக்கான கவுன்சிலிங் ஜனவரி 19 முதல் எம்சிசியால் தொடங்கப்படுகிறது.

நீங்கள்  அனைவரும் நாட்டின் எதிர்காலம். நீங்கள் அனைவரும் சேவையே மதம் என்ற  மந்திரத்துடன் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையை வழங்குவீர்கள் என்று  நம்புகிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”  என்று பதிவிட்டுள்ளார்.

Source Dinakaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here