பார்த்தன் பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

0
24

பார்த்தன் பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் மேளதாளம் முழங்க ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பார்த்தன் பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

பார்த்தன் பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்

திருவெண்காடு அருகே பார்த்தன்பள்ளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். அர்ஜுனன் விரதமிருந்து இந்த பெருமாளை வழிபட்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. இந்த கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

இதனையொட்டி பெருமாள் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மேளதாளம் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.

Source Maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here