மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு

0
20


மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர்:

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. இன்று மதியம் முதல் இது வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

இதேபோல் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவும் 600 கன அடியிலிருந்து 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.  அணை நீர்மட்டம் 114.21 டியாக உள்ளது. 

அணைக்கு வரும் நீரின் அளவு 1926 அடியாக உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் சரிய வாய்ப்பு உள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Source Maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here