வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் மனைவிகளை வலையில் வீழ்த்தி பணம் பறிக்கும் கும்பல் கைது: குற்றாலம் லாட்ஜில் இளம்பெண்களுடன் சிக்கினர்

0
16

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் பணிபுரிபவர்களின் மனைவிகளை குறிவைத்து வலையில் வீழ்த்தி, உல்லாசமாக இருந்துவிட்டு பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 2 பேரை குற்றாலம் லாட்ஜில் போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கல்லம்பலம் அருகே பள்ளிக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜீமா (29) திருமணமாகி 12, 4 வயது மற்றும் ஒன்றரை வயதில் 3 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். அருகில் உள்ள இளமாடு பகுதியை சேர்ந்தவர் நாசியா (28). அவருக்கும் திருமணமாகி 5,1 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவரும் சவுதியில் தான் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 பேரும் தங்களது பச்சிளம் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு திடீரென மாயமானார்கள். இதுகுறித்து 2 பேரின் உறவினர்களும் பள்ளிக்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்படி போலீசார் வழக்குபதிவு செய்து 2 பேரையும் பல்வேறு இடங்களிலும் தீவிரமாக தேடி வந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் 2 பேரும் வர்க்கலா பகுதியை சேர்ந்த ஷைன் (38) மற்றும் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளியை சேர்ந்த ரியாஸ் (34) ஆகியோருடன் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. அவர்களுடன் 2 இளம் பெண்களுக்கும் கள்ளத்தொடர்ப்பு இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.விசாரணையில் 4 பேரும் நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கேரள போலீசார் குற்றாலம் சென்று ஜீமா, நாசியா, ஷைன், ரியாஸ் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை திருவனந்தபுரம் அழைத்து வந்தனர். இதையடுத்து போலீசார் 4 பேரையும் வர்க்கலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.உல்லாசம், பணம் பறிப்பே தொழில்போலீசார் ரியாஸ், ஷைன் குறித்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 2 பேரும் வெளி நாடுகளில் பணிபுரியும் நபர்களின் மனைவிகளை குறிவைத்து அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி கொள்வார்களாம். பின்னர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவிப்பதை தொழிலாக கொண்டுள்ளனர்.அதன்படி தான் ஜீமா, நாசியாவை மயக்கி அவர்களிடம் இருந்து தலா ரூ.50 ஆயிரத்தை பெற்றுள்ளனர். பின்னர் அவர்களை மைசூர், ஊட்டி, கோவை தென்மலை ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து உள்ளனர். இவர்களுடன் சேர்ந்து மொத்தம் 7 இளம்பெண்களை சைஷனும், ரியாஸ் ஏமாற்றி உல்லாசம் அனுபவித்து பணம் பறித்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Source Dinakaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here