வைரலாகும் துல்கர் சல்மான் பாடல் வீடியோ

0
26

திரைப்பட நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துவரும் ‘ஹே சினாமிகா’ படத்தில் இடம்பெறும் துல்கர் சல்மான் பாடிய பாடலின் சிறிய தொகுப்பு வைரலாகி வருகிறது.

திரைப்பட நடன இயக்குனராக வலம் வந்து தற்போது இயக்குனராக களம் இறங்கியிருக்கும் பிருந்தா மாஸ்டர். துல்கர் சல்மான், அதிதி, காஜல் அகர்வாலை வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்குகிறார். கதை மற்றும் பாடலை மதன் கார்க்கி எழுத கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை முதல் முறையாக தமிழில் ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
 
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தை தொடர்ந்து அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தொடர்சியாக இப்படத்தின் அறிவிப்புகள் வெளியானது. இன்று நடிகர் துல்கர் சல்மான் அந்த படத்தில் அவர் பாடிய அச்சமில்லை பாடலின் சிறிய தொகுப்பை வெளியிட்டு அனைவரின் பாரட்டுகளையும் பெற்று வருகிறார்.  
 
துல்கர் சல்மான்
துல்கர் சல்மான்
 
நாளை(ஜனவரி 14) வெளிவரவிருக்கும் இப்பாடல் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. தமிழில் முதல் முறையாக பாடியிருக்கும் துல்கர் சல்மான், துள்ளி ஆடிய படி இந்த பாடலை பாடியிருக்கிறார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
 
இந்தப் பாடல் 45 நிமிடங்களிலேயே பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Source Maalaimalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here