ஷாப்பிங் மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது!’ – கேரள உயர் நீதிமன்றம் கருத்து

0
16

மேலும் அவர், “கட்டட விதிகளின்படி பார்க்கிங் பகுதி என்பது ஒரு கட்டடத்திற்குக் கட்டாயம் இருக்க வேண்டும். இப்போது கேள்வி என்னவென்றால், இப்படிக் கட்டப்படும் கட்டடத்தில் உள்ள பார்க்கிங்க்கு அதன் ஓனர் கட்டணம் வசூலிக்கலாமா என்பதே. என்னுடைய கருத்து அதற்குச் சாத்தியமில்லை என்பது தான். ” என்றார்.

தனியார் மால் நிர்வாகம் அவர்களுடைய சொந்த ரிஸ்கில் வேண்டுமானால் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர், தற்போதைய நிலையில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் முடிவில் தான் அதற்கான உத்தரவு வரும்!

ப்ளாஷ் பேக்:

இதற்கு முன் நடந்த பார்க்கிங் கட்டண பற்றிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

1. போஸ்கா லூயிஸ் என்பவர் இதே நிறுவனத்திற்கு எதிராக இதே போன்ற வழக்கினை பதிவு செய்திருக்கிறார்.

2. கடந்த 2019-ல் குஜராத் உயர் நீதிமன்றம் பார்க்கிங்க்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்றும், பார்க்கிங் பகுதி அங்கு வரும் மக்களுக்கான அடிப்படையான ஓர் பகுதி எனவும், அதனை இலவசமாக தான் தரவேண்டும். ஏனெனில் இது அவர்களின் சட்டரீதியான கடமை எனவும் தெரிவித்தது.

3. சென்ற வருடம் கர்நாடக உயர் நீதிமன்றம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவது நியாயம் தான் என்று தன் கருத்தை தெரிவித்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Source Vikatan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here