12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

0
47
Todays horoscope astrology latest astrology .... AthibAn Tv 1
Todays horoscope astrology latest astrology .... AthibAn Tv 1

வெள்ளி முதல் வியாழன் வரை ( 7.1.2022 – 13.1.2022 ) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.

மேஷம்

சந்திரன், புதன், குரு, சுக்கிரன் சாதகமான நிலையில் உள்ளனர். அனுமன் வழிபாடு நலம் அளிக்கும்.

அசுவினி: உயரதிகாரிகளின் ஆதரவும், சலுகைகளும் கிடைக்கும். உங்களின் சுய முயற்சியால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பழைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

பரணி: உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். அதிக ஆதாயத்துடன் புதிய பணி/ வியாபார வாய்ப்பு வந்து சேரலாம். நண்பர்களுக்கு உதவி செய்து நெகிழ்ச்சியளிப்பீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்: பெண்களால் நன்மையடைவீர்கள். இந்த வாரம் புதன்கிழமை நல்ல செய்தி ஒன்று வரும். பரபரப்புகள் குறைந்து நிம்மதி அதிகரிக்கும். உற்சாகமான வாரம்.

ரிஷபம்

புதன், சுக்கிரன், சந்திரனால் நன்மைகள் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபிட்சம் வளர்க்கும்.

latest tamil news

கார்த்திகை 2,3,4: பொழுது போக்கு அம்சங்கள் ஒருபுறம் இருந்தாலும் கடமையில் கண்ணாக இருப்பீர்கள். எதிர்பார்த்தபடி செயல்கள் நிகழும். புதிய விஷயம் கற்பதில் ஆர்வம் ஏற்படும்.

ரோகிணி: தடைகள் குறுக்கிட்டாலும் அவற்றை முறியடித்து முன்னேறுவீர்கள். ஒவ்வாத உணவுகளைச் சாப்பிட்டதில் ஏற்பட்ட தொல்லை தீரும். குடும்பத்தில் முன்னேற்றமான போக்கு காணப்படும்.

மிருகசீரிடம் 1,2: நட்பால் நன்மை ஏற்படும். உழைப்பின் பலன் சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக எடுத்த கூட்டு முயற்சியில் வெற்றி சற்று தாமதமாகும். கற்ற கல்வி அல்லது வித்தை கைகொடுக்கும்.

மிதுனம்

ராகு, கேது, குரு அதிர்ஷ்டத்தை வழங்குவர். ராமர் வழிபாடு நலம் தரும்.

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் உள்ள ஒருவருக்குக் கூடுதல் வருமானம் வரும். ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளில் கவனம் போகும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு.

திருவாதிரை: சிலருக்கு நிலம் அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. வீட்டில் விருந்தினர் வருவதால் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். நியாயமான தைரியம் ஏற்படுவதால் நல்ல விஷயத

புனர்பூசம் 1,2,3: பயணம் செல்ல நேரிடலாம். சிறிய அளவிலாவது வெற்றி உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் லாபம் கிடைக்கும்.

கடகம்

புதன், சுக்கிரன், செவ்வாய் அருமையான பலன்கள் தருவர். குரு வழிபாடு இன்பம் குவிக்கும்.

புனர்பூசம் 4: வயிறு, குடல் சம்பந்தப்பட்ட சிறு உடல் உபாதைகள் வந்து சரியாகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படும்.

பூசம்: வெளியூர் பயணங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும். திடீர் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். மற்றவர்களின் விமர்சனத்தை பொருட்படுத்த வேண்டாம்.

ஆயில்யம்: தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தவறு செய்யும் நண்பர்களிடமிருந்து விலகுவது நல்லது. நல்லவர்களின் வழிகாட்டுதல் உண்டு. பெரிய லாபங்களை எதிர்பார்ப்பதற்கில்லை.

சந்திராஷ்டமம்: 5.1.2022 இரவு 12:37 மணி – 8.1.2022 அதிகாலை 5:56 மணி

சிம்மம்

குரு, புதன், சூரியன் அதிர்ஷ்டகர பலன்களை தருவர். சிவன் வழிபாடு சிரமம் தீர்க்கும்.

latest tamil news

மகம்: பணம் வருவது தடைபடாது. பங்குதாரர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பணியில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.

பூரம்: கணவரால்/ மனைவியால் நன்மைகள் நிகழும். வீட்டில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். பேச்சினால் பிரச்னைகளில் சிக்காமல் இருக்கப் பாருங்கள்.

உத்திரம் 1: அக்கம்பக்கத்தினருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். மற்றவர்கள் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 8.1.2022 அதிகாலை 5:57 மணி – 10.1.2022 மதியம் 1:47 மணி

கன்னி

கேது, சுக்கிரன், புதன் நலம் தரும் அமைப்பில் உள்ளனர். தட்சிணாமூர்த்தி வழிபாடு வளம் தரும்.

உத்திரம் 2,3,4: உழைப்புக்கேற்ற பலன் அடைவீர்கள். கவலைகள் நீங்கி நிம்மதி நிலவ நண்பர்கள் உதவுவார்கள். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நன்மை தரும்.

அஸ்தம்: எதிலும் அலட்சியம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைப்பதில் துரிதமான பலன் இருக்கும்.

சித்திரை 1,2: பணியாளர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பணத்தைக் கையாளும்போது விழிப்புடன் இருக்கவும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும்.

சந்திராஷ்டமம்: 10.1.2022 மதியம் 1:48 மணி – 12.1.2022 இரவு 11:56 மணி

துலாம்

குரு, புதன், சுக்கிரன் நற்பலன் தருவர். சங்கரர் வழிபாடு சிரமம் நீக்கும்.

சித்திரை 3,4: ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் கவனமாக இருங்கள். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். விலகிய உறவினர் மீண்டும் வந்து சேருவார்கள்.

சுவாதி: கணவன், மனைவிக்கிடையில் சந்தோஷமான உறவு இருக்கும். பிள்ளைகளின் வளர்ச்சிக்காக பாடுபடுவீர்கள். மற்றவர்கள் தவறைச் சுட்டிக்காட்டி திருத்த முயல்வீர்கள்.

விசாகம் 1,2,3: புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தாயாரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். பணவரவு கூடும். அலுவலகப் பணிகளில் கவனம் செலுத்தி வெற்றியடைவீர்கள்.

சந்திராஷ்டமம்: 12.1.2022 இரவு 11:57 மணி – 15.1.2022 மதியம் 11:32 மணி

விருச்சிகம்

சனி, சந்திரன், புதன் சாதக பலன்கள் தருவர். விநாயகர் வழிபாடு நிம்மதி தரும்.

விசாகம் 4: மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. குடும்ப பிரச்னையில் நல்ல முடிவு கிடைக்கும். பணவிஷயத்தில் திருப்தியான நிலை காணப்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

அனுஷம்: உங்களைக் குறை சொல்லியவர்கள் தங்களின் தவறை உணர்வார்கள். காரிய அனுகூலத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். வெற்றியை குறிக்கோளாக கொண்டு முன்னேறுவீர்கள்.

கேட்டை: எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். வீண் செலவைக் குறைப்பதில் வெற்றி காண்பீர்கள். விருப்பம் நிறைவேறும். எதிர்பாலினத்தவரால் லாபம் கிடைக்கும். வெளியூரில் தங்க நேரிடலாம்.

தனுசு

செவ்வாய், ராகு, கேது தாராள நற்பலன் வழங்குவர். ராமர் வழிபாடு சுபபலன் தரும்.

மூலம்: கோபத்தைக் குறைப்பது நல்லது. மற்றவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் முன்னேற்றம் காண முடியும். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உற்சாகம் குறையாது.

பூராடம்: பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நற்செய்தி வந்து சேரும். குடும்பத்தில் பிரச்னை தலைதுாக்கினாலும் தீர்வு கிடைக்கும்.

உத்திராடம் 1: கணவருக்கு/ மனைவிக்கு வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற மனக் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

மகரம்

குரு, கேது, சந்திரனால் நற்பலன் கிடைக்கும். திருமால் வழிபாடு வளம் தரும்.

உத்திராடம் 2,3,4: புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் /வியாபாரத்தை மாற்றுவதானால் பலமுறை யோசித்துச் செய்யுங்கள்..

திருவோணம்: இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தினருக்கு தேவையானவற்றை வாங்குவீர்கள். எதிர்பார்த்த வருமானத்தை அடையப் பாடுபடுவீர்கள்.

அவிட்டம் 1,2: குடும்பத்தில் சுப நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடக்கும். பேச்சில் மென்மையும் நியாய உணர்வும் அதிகரிக்கும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை மறையும். பேச்சினால் வெற்றி உண்டாகும்

கும்பம்

சூரியன், சந்திரன், குருவால் நற்பலன் கிடைக்கும். முருகன் வழிபாடு சுபிட்சம் தரும்.

அவிட்டம் 3,4: மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணம், வெளியூர் பயணம் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. வீண் செலவு ஏற்படலாம்.

சதயம்: பணத்தட்டுப்பாடு குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மகன்/ மகளால் இருந்த கவலைகளும் குழப்பங்களும் நீங்கி நிம்மதி ஏற்படும்.

பூரட்டாதி 1,2,3: எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். செலவு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத தடை ஏற்பட்டு நீங்கும். பணியாளர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நன்மை காண்பர்.

மீனம்

சுக்கிரன், சந்திரன், புதன், சனி பல நன்மைகளை வழங்குவர். விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

பூரட்டாதி 4: சோம்பலைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் தாமதப்படும். குடும்பத்தினருடன் பயனுள்ள பொழுது போக்குகளில் ஈடுபடுவீ்ரகள்.

உத்திரட்டாதி: தள்ளிப்போன விஷயங்களை உடனுக்குடன் முடித்து விடுங்கள். கற்பனை பயங்களால் கவலை அடைய வேண்டாம். மனஸ்தாபம் மறையும். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது.

ரேவதி: எப்போதோ ஈடுபட்ட முயற்சிகள் நற்பலன் தரும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பழைய நண்பர்களுடன் சந்திப்பு நிகழும்.

Source Dinamalar

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here