WhatsApp Channel
சந்திரகிரகணத்தையொட்டி திருப்பதி கோயில் நடை 8 மணி நேரம் மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வரும் 29ஆம் தேதி சந்திரகிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நாளை (சனிக்கிழமை) இரவு 7.05 மணி முதல் 29ஆம் தேதி அதிகாலை 3.15 மணி வரை மூடப்படுகிறது.
அதன்பின், கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, ஏகாந்தத்தில் சுத்தி மற்றும் சுப்ரபாத சேவைக்கு பின், அதிகாலை 5.15 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஏழுமலையான் கோவிலுக்கு சுமார் 8 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது. மேலும், நாளை சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. திருமலையில் அனைத்து இடங்களிலும் அன்ன பிரசாதம் நிறுத்தப்படும். இதை மனதில் கொண்டு பக்தர்கள் திருமலை யாத்திரையை திட்டமிட வேண்டும்.
அவ்வாறு கூறுகிறது.
Discussion about this post