WhatsApp Channel
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வரும் 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் நடைபெறும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசனுக்கான அட்டவணையை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 16ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. மண்டல பூஜை வரும் 17ம் தேதி முதல் டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் நடைபெறும். 27ம் தேதி இரவு நடை அடைக்கப்படும்.
மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படுகிறது. மகரவிளக்கு பூஜைகள் அடுத்த ஆண்டு (2024) 31ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை நடக்கிறது. அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் நடைபெறும். வரும் 19ம் தேதி வரை பூஜைகள் நடக்கிறது. 20ம் தேதி காலை பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி தரிசனம் முடிந்து கோவில் மூடப்படும். அதோடு தற்போது மண்டல மகரவிளக்கு சீசன் முடிந்துவிடும்.
Discussion about this post