காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது பீடாதிபதி – ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

0

காஞ்சி காமகோடி பீடத்தின் 71வது பீடாதிபதி – ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்

இந்தியாவின் ஆன்மிகத் தலங்களில் முக்கியமான இடத்தை பெற்றுள்ள காஞ்சி காமகோடி பீடம், அதன் 71வது பீடாதிபதியை அண்மையில் அறிவித்துள்ளது. ரோகிணி நட்சத்திரம் மற்றும் அட்சய திருதியை நாளில், ஸ்ரீ கணேச சர்மா திராவிட், ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ற தீட்சாநாமத்துடன் சந்நியாச தீட்சை பெற்று பீடாதிபதியாக ஆனார்.

ஆந்திரப் பிரதேச மாநிலம் துனியில் பிறந்த கணேச சர்மா, ஆரம்பத்திலிருந்தே வேதம் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். தெலங்கானா மாநிலத்தின் பசாராவில் ரிக்வேதம் பயின்ற இவர், திருப்பதி தேவஸ்தானத்தின் பல்லாமுடி சத்திய வெங்கட ரமணமூர்த்தியிடம் ஷப்தமஞ்சரி, தாதுரூபாவளி போன்ற நூல்களை கற்றார். மேலும் கம்மம்பள்ளி சதீஷாச்சாரியாரிடம் வேத அர்த்தம் மற்றும் சமஸ்கிருதம் பயிலத் தொடங்கியதோடு, 2009ஆம் ஆண்டு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை தரிசித்த நிகழ்வு அவரது வாழ்க்கையில் ஒரு ஆன்மீக திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பின் ரத்னாகர பட்டிடம் 12 ஆண்டுகள் வேதபயிற்சி செய்தார். ரிக்வேத சம்ஹிதை, பிரஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத்துகள் என பல்வேறு வேத நூல்களை அவர் ஆழமாக கற்றார். இதற்கு மேல் பிரதிஷாக்யம், ஜடாபாதம், வியாலி சிக்‌ஷா போன்ற நூல்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

2019ல் அத்திவரதர் தரிசனம், 2022ல் சாதுர்மாஸ்யம், 2024ல் ஸ்கந்தகிரி பாராயணம் போன்ற ஆன்மிக நிகழ்வுகளில் பங்கேற்று, ஆன்மீகத் துறையில் அவரது நிலையை உயர்த்தினார். மார்ச் மாதத்தில் திருப்பதியில் பத்து நாட்கள் தங்கி ஜெயேந்திர சுவாமிகள் ஆராதனையில் பங்கேற்ற பின், காஞ்சிக்கு வந்து அம்மன் தரிசனம் செய்ததோடு, பிருந்தாவனத்தில் ஜெயேந்திர சுவாமிகளை தரிசித்தார்.

இதன் பின், ஏப்ரல் 14 முதல் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மேற்பார்வையில் ஒராண்டு காலம் வேதபயிற்சி செய்த பின், 2025ம் ஆண்டு அட்சய திருதியையில், பஞ்ச கங்கா தீர்த்தத்தில் சந்நியாஸம் பெற்று பீடாதிபதியாக ஆனார். ரோகிணி நட்சத்திரத்துடன் அட்சய திருதியை நிகழ்வது அபூர்வம் என்றும், அடுத்த 27 ஆண்டுகளில் மட்டுமே இதுபோல் நிகழும் என்றும் கூறிய விஜயேந்திர சுவாமிகள், புதிய குருநாதரை வணங்கச் சொன்னது மக்களுக்கு வழிகாட்டலாக அமைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here