மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு

Daily Publish Whatsapp Channel


மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறக்கப்படுகிறது

மாத வழிபாட்டை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று (ஜூலை 16) மாலை பக்தர்களுக்காக நடை திறக்கப்படுகிறது. கடந்த ஜூலை 11-ஆம் தேதி மாலை, நவகிரக பிரதிஷ்டை மற்றும் அதனை ஒட்டிய வழிபாடுகளுக்காக கோயில் நடைத் திறக்கப்பட்டிருந்தது.

அதன்பின், ஜூலை 12-ஆம் தேதி பல்வேறு பஜனை, யாகங்கள் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்றன. ஜூலை 13-ஆம் தேதி நவகிரக கோயிலில் புனர்பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்குப் பின்னர், அதே நாளிரவு 10 மணிக்கு நடை மூடப்பட்டது.

மீண்டும், மாதாந்திர பூஜையின் காரணமாக இன்று மாலை நடை திறக்கப்பட உள்ளது. மாலை 5 மணிக்கு, தந்திரிகள் கண்டரரு ராஜீவரும், பிரம்மதத்தன் ராஜீவரும் தலைமையிலான வழிபாட்டின்போது, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறக்கும் பணி மேற்கொள்கிறார்.

நாளை (ஜூலை 17) அதிகாலையில் தொடங்கும் வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறுவதை அடுத்து, ஜூலை 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை மீண்டும் மூடப்படும். அதனைத் தொடர்ந்து, நிறைபுத்தரி பூஜையை ஒட்டி ஜூலை 29-ஆம் தேதி நடை மீண்டும் திறக்கப்படும். அந்த நாளில் நடைபெறும் ஒரு நாள் வழிபாட்டுக்குப் பிறகு, ஜூலை 30-ஆம் தேதி இரவு நடை மூடப்படும்.

இந்த காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருவதால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் குடை, மழைக்கோட் போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வர வேண்டும் என தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

Facebook Comments Box