ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
உலகப் புகழ்பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஆனி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று குவிந்தனர்.
அக்னி தீர்த்த கடற்கரைக்கு வருகை தந்த பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்தனர். பின்னர் பூஜைக்காக கொண்டு வரப்பட்ட மாட்டுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை வைத்து வழிபட்டனர். இதையடுத்து ராமேஸ்வரம் கடற்கரையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
Discussion about this post