அயோத்தியில் ராமர் கோயிலுக்குச் செல்லும் சாலையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வண்ண விளக்குகள் திருடப்பட்டுள்ளன.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இந்துக் கடவுளான ராமர் கோயில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடந்தது.இதை தொடர்ந்து ராமர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்ய அனுமதிக்கப்பட்டனர். அன்றிலிருந்து அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகளின் பராமரிப்பு தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விளக்குகளின் மதிப்பு சுமார் ரூ.1 கோடி.
இந்நிலையில், அயோத்தி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள வண்ண விளக்குகளில் 3 ஆயிரத்து 800 வண்ண விளக்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 36 லேசர் விளக்குகளும் திருடப்பட்டுள்ளன.
மார்ச் 19-ம் தேதி கணக்கெடுப்பின்போது அனைத்து விளக்குகளும் இருந்த நிலையில், அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் பாதிக்கும் மேற்பட்ட விளக்குகள் திருடப்பட்டது தெரியவந்தது. திருடப்பட்ட வண்ண விளக்குகளின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Discussion about this post