நரசிம்ம மந்திரத்தை பாராயணம் செய்பவர்கள் பயம் மற்றும் கஷ்டங்களிலிருந்து விடுபடுவார்கள். நரசிம்மர், 74-க்கும் மேற்பட்ட ரூபங்களில் அருள்புரிபவர். இதில் 9 முக்கியமான வடிவங்கள் உள்ளன: உக்கிர நரசிம்மர், க்ரோதா நரசிம்மர், வீர நரசிம்மர், விலம்ப நரசிம்மர், கோப நரசிம்மர், யோக நரசிம்மர், அகோர நரசிம்மர், சுதர்சன நரசிம்மர், லட்சுமி நரசிம்மர்.
இந்த வடிவங்களில், யோக நரசிம்மரும், லட்சுமி நரசிம்மரும் மட்டுமே சாந்த சொரூபமாக உள்ளனர். மற்ற எல்லா வடிவங்களிலும், நரசிம்மர் உக்கிர வடிவத்தில் அருள்புரிகிறார்.
பெரும்பாலான நரசிம்மர் கோவில்களில், வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் பூசாரிகளே தினசரி பூஜைகளை செய்வார்கள். ஆனால், ஸ்ரீ யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோவில்களில் இந்த விதி இல்லை.
நரசிம்மரின் மந்திரங்களை பயபக்தியுடன், விடாமுயற்சியுடன், முழு நம்பிக்கையுடன் பாராயணம் செய்வது பயத்தை நீக்கி, நரசிம்மரின் அருளைப் பெற வழிவகுக்கும். நரசிம்ம மந்திரத்தை ஜபிக்க வியாழக்கிழமையன்று, நெய் விளக்கேற்றி, மஞ்சள் ஆடை அணிந்து, வடக்கு நோக்கி அமர்ந்து தொடங்க வேண்டும்.
இந்த மந்திரம் பாராயணம் செய்வதால் பயம், கஷ்டங்கள் நீங்கும். மன அமைதி இழக்காமல், துன்பங்கள் நெருங்காது, அமைதி, செல்வ வளம், நிம்மதி கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை.
Discussion about this post