கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் 25,000 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.பி. பிரவீன் கண்டேல்வால் கூறினார்.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவர்களது வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் கிருஷ்ணர், ருக்மணி வேடமணிந்து மகிழ்ந்தனர். கிருஷ்ணர் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களை ஆசீர்வதிப்பார் என்பது நம்பிக்கை.
இந்நிலையில், இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.பி.பிரவீன் கண்டேல்வால் கூறியதாவது: கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்காக, பூக்கள், இனிப்புகள், அலங்கார பொருட்கள் வாங்க, பொதுமக்கள், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளனர் என்றார்.
Discussion about this post