திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மற்றும் கீழ்திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் செப்டம்பர் 2024 மாதத்தில் நடைபெறும் சிறப்பு விழாக்கள் குறித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருமலையில் செப்டம்பர் மாத சிறப்பு விழாக்கள்:
- செப்டம்பர் 5: பலராம ஜெயந்தி மற்றும் வராஹ ஜெயந்தி
- செப்டம்பர் 7: விநாயக சவிதி (விநாயகர் சதுர்த்தி)
- செப்டம்பர் 17: அனந்த பத்மநாப விரத வழிபாடு
- செப்டம்பர் 18: பத்ரபாத மாத கருடசேவை
- செப்டம்பர் 28: சர்வ ஏகாதசி
கீழ்திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் நடைபெறும் சிறப்பு விழாக்கள்:
- செப்டம்பர் 6, 20, 27: ஆண்டாள் ஊர்வலம்
- செப்டம்பர் உத்திர நட்சத்திரம்: கோவிந்தராஜ சுவாமி ஊர்வலம்
- செப்டம்பர் 13: வருடாந்திர பவித்ரோத்சவ விழாவிற்கான அங்குரார்பணம்
- செப்டம்பர் 14-16: பவித்ரோற்சவம்
- செப்டம்பர் 18: மாதாந்திர கருட சேவை
- செப்டம்பர் 23: ரோகிணி நட்சத்திரம்: ஸ்ரீ பார்த்தசாரதி மற்றும் தாயார் உற்சவ மூர்த்திகள் ஊர்வலம்.
இந்த தகவல்களின்படி, திருப்பதி கோவில்களில் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன, அதில் பக்தர்கள் பங்கேற்கலாம்.
Discussion about this post