லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன்பு இந்து சாது பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருப்பதாக வெளியான தகவல் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருப்பதி பிரசாத விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன் இந்து சாது பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லட்டில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post