திருப்பதி லட்டில் கலப்பட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தெலங்கானாவில் உள்ள யாதாத்ரி கோவிலில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த யாதாத்ரி கோவில் செயல் அலுவலர் பாஸ்கர ராவ் கூறியதாவது: கோவிலில் பயன்படுத்தப்படும் நெய் குறித்து, பக்தர்களிடையே எழுந்துள்ள சந்தேகங்களை நீக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நெய் தொடர்பான ஆய்வு முடிவுகள் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்றும் அவர் கூறினார்.
யாதாத்திரி கோவிலில் தினமும் 600 முதல் 700 கிலோ நெய்யை பயன்படுத்தி 25,000 முதல் 30,000 லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன, மேலும் தினமும் 25,000 பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
இதேபோல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தயாரிக்கப்படும் பிரசாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், பிரசாதத்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
Discussion about this post