மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுத்தது.
டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த விஷ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின், சிறுபான்மை அமைப்புகள் வழிபாட்டுத் தலங்களை நிர்வகிக்கும் போது இந்துக்களால் ஏன் கோயில்களைக் கட்டுப்படுத்த முடியாது என்று கேள்வி எழுப்பினார்.
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில்களை விடுவிக்க உறுதி பூண்டுள்ளதாக கூறியுள்ள சுரேந்திர ஜெயின், இது தொடர்பாக நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
கோவில்களை சீரமைக்க கோரி, மாநில கவர்னர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும், தேவைப்பட்டால், இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகவும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
Discussion about this post