மலேசியாவில் நடைபெறவுள்ள உலக சைவ நெறிமுறை மாநாட்டில் பங்கேற்பதற்காக விமான நிலையத்திற்கு ரத யாத்திரை புறப்பட்ட தருமபுரம் ஆதீனத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில் உலக சைவ நெறிமுறை மாநாடு வரும் 28ம் தேதி நடக்கிறது. மாநாட்டை 27வது குருமகா சன்னிதானம் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் துவக்கி வைக்கிறார்.
இந்நிலையில், மலேசிய மாநாட்டில் பங்கேற்பதற்காக சொக்கநாதப் பெருமான் சுவாமியுடன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தருமபுர ஆதீனம் வரை பூரண கும்ப மரியாதையுடன் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Discussion about this post