‘முஸ்லிம் வாக்கு வங்கியை திருப்திப்படுத்தவே மம்தா ஆபரேஷன் சிந்தூரை எதிர்க்கிறார்’ – அமித் ஷா

0

உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், “முஸ்லிம் வாக்காளர்களை கவரும் நோக்கத்தில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் வக்பு சட்ட திருத்தத்துக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவிக்கிறார்” என்றார்.

கொல்கத்தாவில் பாஜக தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார். “ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக மம்தா நிலைபேறுவது, நாட்டின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவமதிப்பதாகும். இதற்கான பதிலை 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் கூறுவார்கள்” என்றார்.

ஏப்ரல் மாதத்தில் முர்ஷிதாபாத்தில் நடந்த கலவரத்தில் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்புடையதாகவும், அதற்கு அரசு நேரடி ஒத்துழைப்பு அளித்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். கலவரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சகம் எல்லைப் பாதுகாப்புப் படைகளை அனுப்ப வேண்டியதாயிருந்தபோதும், மாநில அரசு அதனை அனுமதிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும், மம்தா பானர்ஜி வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக இருப்பதும், எல்லைகளைத் திறந்து வைப்பதும், ஊடுருவலைத் தடுக்க முடியாத சூழலை உருவாக்குவதாகவும் அமித் ஷா கூறினார். “பிஎஸ்எஃப் படைகள் நிலைநிறுத்த நிலம் வழங்க மறுப்பதன் மூலம் டிஎம்சி அரசு ஊடுருவலுக்கு வாய்ப்பளிக்கிறது” என்றும் அவர் சாடினார்.

இதற்கு முந்தையதாக, பஹஸ்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி மற்றும் பாஜக அரசியல் நோக்கில் பயன்படுத்துகிறார்கள் என மம்தா பானர்ஜி விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here