சசி தரூர் தலைமையிலுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு அளித்த விளக்கத்தை ஏற்று, பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட அறிக்கையை கொலம்பியா அரசு மீண்டும் பெற செய்துள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7ஆம் தேதி இந்திய விமானப்படை பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்தது. இந்த தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். ஆனால், இந்த நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் தெரிவித்தது. இதனை நம்பிய கொலம்பியா, பொதுமக்கள் உயிரிழந்ததற்காக பாகிஸ்தானுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தது.