‘அணுசக்தியின் பேரழிவை அமெரிக்கா தடுத்தது’ – இந்தியா – பாக். போரை நிறுத்தியதாக ட்ரம்ப் பேச்சு

0

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலைத் தடுக்க அமெரிக்கா மேற்கொண்ட பங்கு மற்றும் அதனால் அணுசக்தி பேரழிவு தவிர்க்கப்பட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் எலான் மஸ்க்குடன் “தி ஓவல் அலுவலகத்தில்” பத்திரிகையாளர்களை சந்தித்த ட்ரம்ப், கூறியதாவது:

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த மோதலை தடுப்பதில் முக்கியப் பங்கு வகித்தது நாங்கள்தான். அந்த மோதல் நடைபெற்று இருந்தால் அது மிகப் பெரிய அணுசக்தி பேரழிவாக மாறியிருக்க வாய்ப்பு இருந்தது என்று நம்புகிறேன்.

அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளிடையே நாம் வணிக ஒப்பந்தங்களில் ஈடுபட முடியாது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது போல் நடந்தால். இந்த நிலையில் இரு நாடுகளின் தலைவர்களும் அமைதிக்காக எடுத்த முயற்சிக்கு நான் பாராட்டுகளை தெரிவிக்கிறேன். அமெரிக்க அரசு அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் இந்த முயற்சியில் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். உலகளாவிய அமைதியை தக்கவைக்க அமெரிக்கா தனது தலைமைத்துவத் திறமை மற்றும் ராணுவ வல்லமையை பயன்படுத்தியுள்ளது.” என ட்ரம்ப் கூறினார்.

இதற்கு முன்பு, கடந்த 13-ஆம் தேதி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதி நிலைநிறுத்தப்பட்டதையடுத்து இரு நாடுகளும் இணைந்து இரவு உணவு உண்பதற்கான நாள் வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் செயல்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் முகாம்களை “ஆபரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையின் மூலம் இந்தியா அழித்தது. இதனைக் கண்டித்து பாகிஸ்தான், இந்திய எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் வான்வழி தாக்குதலை நடத்த முயன்றது. அந்த முயற்சியை இந்தியா, தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ராணுவத்தின் வழியாக தவிர்த்தது. பின்னர், இரு நாடுகளும் போர்நிறுத்தத்தை அறிவித்தன.

இந்த விவகாரத்தில் எந்தவொரு வெளிநாட்டு தலையீடும் இல்லை என மத்திய அரசு உறுதியாக தெரிவித்திருந்தாலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதன்முதலில் போர்நிறுத்தம் பற்றிய தகவலை வெளியிட்டது எதிர்க்கட்சிகளிடமிருந்து கேள்விகளை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலை தடுத்ததாக ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். இது உலக அரசியலில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here