தில்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகத்திற்கு வெளியே வெள்ளிக்கிழமை (ஜன.29) மாலை 5.05 மணியளவில் சக்தி குறைந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில், 3 கார்கள் மட்டுமே சேதமடைந்தன. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இஸ்ரேல் விசாரணைக் குழுவினரும், இந்திய விசாரணைக் குழுவினரும் இணைந்து இஸ்ரேல் தூதரகப் பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே இது குறித்து பேசிய இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரோன் மல்கா கூறியதாவது, இப்போது இருப்பதை போன்று இந்தியா மற்றும் இஸ்ரேல் அதிகாரிகளிடையே எப்பொழுதும் முழுமையான இணக்கம் இருந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம். குண்டு வெடிப்பு நிகழ்ந்த நேற்று (ஜன.29) இந்தியா – இஸ்ரேல் இடையேயான உறவு நிறுவப்பட்ட 29-ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. அந்த தினத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது என்று கூறினார்.
The post இஸ்ரேல் தூதரக குண்டு வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதல் : இஸ்ரேல் தூதர் appeared first on தமிழ் செய்தி.
Facebook Comments Box