அதானிக்கு அமெரிக்கா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிண்னனி என்ன? பித்தலாட்டம் என்ன?
4000 கோடி லஞ்சம் கொடுத்தது அதானி, வாங்கியது நம்ம தத்தி அரசு, முந்தைய ஜெகனின் ஆந்திர அரசு, மமதையின் மேற்குவங்க அரசு.
அது நடந்தது இந்தியாவில், ஆனால் அமெரிக்காவின் கோர்ட் இதில் எங்கே வருகிறது? எப்படி அங்கே வழக்காக மாறியது?
மேலும் கொடுத்தது அதானி, வாங்கியது நம்ம திருட்டு திராவிடம், இதில் மோடிக்கும் ஊழலுக்கும் என்ன சம்பந்தம்?
இந்தியாவில் மன்மோஹன் சிங் என்ற பொம்மையை பிரதமராக்கிவிட்டு இத்தாலி மாஃபியா குடும்பம் ஆண்டது போல அமெரிக்காவில் Deep State of America என்ற ஒரு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அது என்றுமே Democrats அரசை அதிகம் கட்டுப்படுத்தக்கூடியது.
அது எவ்வளவு வலுவானது என்றால், இந்த சக்திதான் அமெரிக்காவின் ஜனாதிபதி கென்னடியை கொன்றது, நிக்ஸனை வாட்டர்கேட் ஊழலில் மாட்டவைத்தது, நமது பிரதமர் இந்திரா, ராஜீவ் காந்தியை, ஜப்பான் பிரார் அபேயை கொன்றது. அதற்கு எதிரான் யாரையும் விட்டு வைக்காது அது அவர்களின் ஜனாதிபதியாகவே இருந்தாலும்.
சென்ற தேர்தலில் ட்ரம்பை தோற்கடித்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது Donald Trump ஐ கொல்ல சதி செய்தது. அவரை வழக்கில் சிக்க வைத்தது என்று அது நீண்டு கொண்டே போகும்.
இந்த சக்திக்கு பணத்தை அள்ளிக் கொடுப்பது ஆயுத வியாபாரிகள், ஃபார்மசூட்டிக்கல் என்ற மெடிக்கல் மாஃபியா, க்ரூட் ஆயுள் என்ற எண்ணெய் வியாபரிகள். இவர்களுக்கும் அரசுக்கும் அந்த கட்டளையை அல்லது விருப்பத்தை எக்ஸிக்யூட் செய்வதற்கு ஜார்ஜ் சோரஸ் போன்ற கெழட்டு பன்னிகளும் நரிகளும், பராக் ஒபாமா போன்ற முன்னாள் ஜனாதிபதிகளும் அரசை கட்சி ரீதியாக கட்டுப்படுத்துவதன் மூலம் செய்வார்கள்.
அதனால் அவர்களுக்கு பைடன் போன்றதொரு வீக்கான ஜனாதிபதியும், கமலா ஹாரிஸ் போன்ற கொத்தடிமையும் தான் தேவை. இந்த சக்திகள் பரம எதிரான சீனாவுடன் கூட நெருங்கிய உறவில் உள்ளது.
அமெரிக்கா கேபிடலிஸத்தை மையப்படுத்திய நாடு என்றாலும், அவர்கள் மற்ற நாடுகளில் கம்யூனிஷம் போன்ற ஊழல் சர்வாதிகாரிகள் ஆட்சியில் இருப்பதை விரும்புகிறது.
அவர்கள் மோடி போல பலமான நபர் எந்த ஒரு நாட்டிலும் பிரதமராக ஆள்வதை விரும்பவில்லை என்பதை விட அடியோடு வெறுக்கிறார்கள். அதனால் மோடி ஆட்சியை வீழ்த்த பல வழிகளில் முயல்கிறார்கள். அதில் ஒன்று அதானியை வைத்து செய்யும் இந்த விளையாட்டு.
அதானி குழுமத்தை வீழ்த்தி, அந்த குற்ற்ச்சாட்டை மோடி அரசு மீது சுமத்தினால், பங்கு சந்தையும், அரசும் வீழும் என்பது ஜார்ஜ்ச் சோரஸ் என்ற கெழட்டு பன்னிகள், டீஃப் ஸ்டேட் ஆஃப்ப
அமெரிக்காவின் நம்பிக்கை.
இப்போது மோடியின் நண்பர் ட்ரம்ப் வந்து விட்டதால, அவர் பதவி ஏற்குமுன் இந்த விஷயம் வேகப்படுத்தி அவசர, அவசரமாக குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார்கள்.
விற்றவனும் வாங்கியவனும் இந்தியாவில் இருக்க, அமெரிக்கா கோர்ட் எப்படி உள்ளே வருகிறது?
அதானி குழுமம் அமெரிக்காவிலிருந்து முதலீட்டை ஈர்ப்பதால், அங்கே அவர்கள் முதலீடு செய்பவர்கள் உரிமையாக அந்த வழக்கு அங்கே அவசரமாக எடுக்கப்பட்டு, விசாரித்து, அடுத்த அரசு வருவதற்கு முன்பு ஏதோ அதானிக்கு பிடிவாரண்ட் எல்லாம் கொடுத்திருக்கானுக. ஆமாம் இதே குரூப்தான் ட்ரம்ம்புக்கு சில மாதங்களுக்கு முன்பு அதே கோர்ட்டில் தண்டனை கொடுத்தது ஞாபகத்தில் வருகிறதா? அது பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன், அதை பார்க்கவும்.
இதில் மத்திய அரசுக்கு என்ன சம்பந்தம்!
மத்திய அரசு Green Energy என்ற சோலார், விண்ட்மில் போன்ற சிறிய உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க, அவர்களிடம் மின்சாரம் வாங்கி தேவைப்படுவோர்களுக்கு கொடுக்கிறது. அதுதான் Solar Energy Corporation of India (SECI) என்றதொரு மத்திய அரசு சார்ந்த நிறுவனம்.
அது 12,000 கோடிக்கு மின்சாரத்தை கொடுக்க ஏலம் விடுகிறது. அதில் 8,000 கோடி மதிப்பில் அதானி நிறுவனமும், மற்றதை மற்ற சில நிறுவனங்களும் கொடுக்க ஒப்பத்ந்தம் போடுகிறது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் SECI ஒரு கண்டிஷன் போடுகிறது, இந்த மின்சாரத்தை வாங்க நிறுவனங்கள் இல்லாவிட்டால், அந்த ஒப்பந்தத்தை கேன்சல் செய்யும் உரிமை தமக்கு இருக்கிறது என்பதுதான்.
அதனால், அதானி நிறுவனம் சில மாநிலங்களுடன் நேரடியாக பேசி, SECI மூலம் தனது மின்சாரத்தை வாங்க லஞ்சமாக 4,000 கோடி கொடுக்கிறது. அதுதான் இன்று பேசப்படுகிறது.
ஆனால் யார் வாங்கியது, என்பதைப்பற்றி யாரும் பேசவில்லை என்பதுதான் ஆச்சரியம். ஏனென்றால் ஊழல் என்று வந்தாலே அதில் திமுக அரசு இல்லாமலா?
ஆம் நம்ம திருட்டு திமுக ஆளும் தமிழகம், ஜெகனின் ஆந்திரா, மமதையின் மேற்கு வங்கம், ஒரிஸ்ஸா என்ற மாநிலங்கள் அந்த பணத்தை பெறுகிறது. இதில் எந்த பாஜக ஆளும் மாநிலங்களும் இல்லை. ஏனென்றால் விலையை உயர்த்தி அவர்கள் வாங்கவில்லை.
அதாவது ஒரு யூனிட் காஸ்ட் ₹ 4 என்றால், அதை ₹ 8 க்கு வாங்குவார்கள். அதில் ₹ 2 நம்ம திருட்டு தத்தி அரசுக்கு, மீதி விற்பவருக்கு. தமிழகத்தில் விலையை உயர்த்தி வாங்கியதால், அதை செய்தவன் அதே பத்து ரூபா பாலாஜிதான்!
இப்போ இந்த விஷயம் வெளி வந்த போது அதானி நிறுவனத்தை விட இந்த லஞ்சம் வாங்கிய திருடர்கள் தான் மீடியாவில் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால் யாரைப்பற்றி பேசுகிறார்கள், அதானி பற்றியும், அதானிக்கு ஆதரவு கொடுப்பதாக சொல்லும் பாஜக அரசு பற்றியும் தான். ஆம் அந்த மீடியாக்கள் இவர்களின் கொத்தடிமை தானே!
உண்மையில் அதானிக்கு ஆதரவு கொடுப்பதாக இருந்தால் பாஜக ஆளும் மாநிலங்களுத்தானே லஞ்சம் கொடுத்திருக்க வேண்டும். இது யாருக்கும் புரிவதில்லை, புரிய விடாமல் குழப்புவதில் திருட்டு திராவிடம் கைதேர்ந்தது..
இந்த சூழலில், குறிப்பாக ஆந்திர அரசு மீதும், தமிழக அரசு மீதும் அமெரிக்க நீதிமன்றம் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. அந்த செய்தி வெளி வரவேயில்லை.
ஆனால் அந்த பத்து ரூபாபாலாஜி என்ன சொல்றான், நாங்க மத்திய அரசு நிறுவனத்திடம் இருந்து தானே வாங்கினோம், எனவே ஊழலுக்கு அதுதான் பொறுப்பு என்று லாவகமாக திசை திருப்புகிறான்.
அதை மக்கள் முன்கொண்டு வரவேண்டியது அதிமுக, அது கோமாவில் இருக்கிறது அல்லது அதற்கு ஏற்கனவே கமிஷன் வந்திருக்கும். எனவே அண்ணாமலைதான் இதை வெளியே கொண்டு வர வேண்டும். அவர் லண்டனில் படித்து கொண்டு இருக்கிறார், விரைவில் வருவார், பேசுவார்.
எனவே இங்கே இருக்கும் மீடியா அதானிக்கு பேன் பார்க்கிறது. தத்தி அரசு காசு பார்க்கிறது.
சரி, அதானிக்கு ஏன் முட்டுக் கொடுக்கிறாய் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.
அதே மின்சாரத்தை பாஜக ஆளும் மாநிலங்களுக்கு ₹4 ரூபாய்க்கு மட்டும் கொடுக்கிறது, அதனால் அவர்களிடம் லஞ்சம் வாங்க முடியாது. ஆனால் இங்கே ₹4 மின்சாரத்தை ₹8 ரூபாய்க்கு உயர்த்தி விற்கச்சொல்வது திருட்டு திராவிட அரசு. அத்ன் மூலம் ₹4 லாபம் அதானி நிறுவனத்திற்கு வருகிறது, அதில் ₹2 லஞ்சமாக தத்தி அரசுக்கு கொடுக்கிறது. அதாவது தத்தி அரசு விலையை உயர்த்தி கொடுக்க சொல்லி, தமிழக அரசின் பணத்தை கொள்ளை அடிக்கிறது.
அதன் விளைவு, தமிழக மின்சார வாரியம் கடனில் மூழ்குகிறது, நாம் ₹200 வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டதால், மாதம் ₹400 மின்சார கட்டணமாக அதிகம் கட்டுகிறோம் என்பது அடுமுட்டாள்களாகிய நமக்கு பு(தெ)ரியவில்லை.
அதை திசை திருப்ப, அதானின் ₹ 4,000 கோடி லஞ்சம் கொடுத்தார், அதில் மோடிக்கு கமிஷன் போகிறது என்பதால் மோடி அதானிகளை பாதுகாக்கிறார் என்று பேசறானுக, ஆனால் வாங்கியது இந்த திருடர்கள். மற்றவன் சொல்லுமுன் திருடன் திருடன்னு சத்தம்போ போட்டது யாருன்னா பார்த்தா அவந்தான் திருடனா இருப்பான். பேசியது யார்னு பார்த்தா, அதானி கொடுத்த லஞ்சத்தை வாங்கிய அதே திராவிட திருடர்கள் தான்.
ஆம், அதுதான் அவர்கள் பலம், பாஜகவின் பலவீனம். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்காது, அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை மறுக்கவும் முடியாது.
ஏனென்றால் அதானி லஞ்சம் கொடுத்தார் என்று அவர்களிடம் இருக்கும் மீடியா மூலம் பரப்பியவனுகளுக்கு விளக்கம் கொடுத்து கொண்டிருந்தால், அது முடியும் முன் இன்னொரு விஷயத்தை பற்றி போட்டு விட்டு போய்டுவானுக.
இந்த மோடி அரசால் தேர்தலை வெல்லலாம், இவர்களை ஒரு போதும் வெல்ல முடியாது. ஏனென்றால் அவர்கள் சிஸ்டம் மிக பலமாக பணம், பதவி, பெண் என்று பிணைக்கப்பட்டது.
அதையும் தாண்டி தவறானாவர்களை வலுவாக இணைக்கிறது, நம் சினிமா என்ற வகையில் மட்டும் தான் பெண் என்று கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் போது, அந்த விஷயம் மீடியாவில் எவ்வளவு மோசமான, கேவலமான நிலையில் உள்ளது என்பதை யாரும் உணரவில்லை. இந்த பொம்பள மேட்டர்தான் அவனுகளை ஆரம்பத்தில் இருந்து இணைக்கும் பலமான பாலம்..
மோடி மீது குற்றம் சொல்வது சரியா, என்றால் சரிதான் என்பேன். ஏனென்றால், இந்த ஊழல் செய்யும் அரசுகளை, மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது என்றால் அதற்கும் பொறுப்புள்ளது தானே?!
இந்த திருடர்களை நசுக்க மோடியால் முடியாது, அதற்கு புல்டோஸர்கள் தேவை. அதற்கான சூழலை சிஸ்டத்தையும், சட்டத்தையும் மட்டும் உறுவாக்கி கொண்டு இருக்கிறார் மோடி!
Discussion about this post