நாடு முழுவதும் 50 சுற்றுலாத் தலங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது சுற்றுலாத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர், சுற்றுலாத் தலங்களில் உள்ள ஹோட்டல்களுக்கும் முத்ரா கடன் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று கூறினார்.
இந்தியாவில் ஆரோக்கியம் என்ற திட்டத்தின் கீழ் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் என்று கூறிய நிதியமைச்சர், நாடு முழுவதும் 50 சுற்றுலாத் தலங்கள் மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலா குழுக்களுக்கு விசா தள்ளுபடிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறிய நிதியமைச்சர், ஆன்மீக மற்றும் பாரம்பரிய சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அறிவித்தார்.