மத்திய பட்ஜெட் சாமானிய மக்களுக்கான பட்ஜெட்… பிரதமர் மோடி பெருமிதம்

0

மத்திய பட்ஜெட் சாமானிய மக்களுக்கான பட்ஜெட் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

அப்போது பேசிய அவர், மத்திய பட்ஜெட் அனைவரின் கனவுகளையும் நனவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார். சேமிப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மத்திய பட்ஜெட்டில் அனைத்து வகையான வேலைவாய்ப்புகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தொடர்ந்து கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here