ஜகார்த்தாவில் உள்ள முருகன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவையொட்டி, இந்தோனேசிய மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, ”முருகன் நலமாக இருக்கட்டும்” என்று கூறி தனது உரையைத் தொடங்கிய அவர், மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஜகார்த்தாவிலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும், இந்தியாவும் இந்தோனேசியாவும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன் என்று பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அங்குள்ள அனைத்து மக்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
Discussion about this post