WhatsApp Channel
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய ஜவுளித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி இயக்குனர் பூர்ணிமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்தார்.இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் லட்சக்கணக்கான கழிவறைகள் கட்டப்பட்டன. 2019 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளின் போது, கிராம பஞ்சாயத்துகள், மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாததாக அறிவிக்கப்பட்டது. தூய்மை இந்தியா பிரசாரத்தின் ஒரு பகுதியாக கடந்த மாதம் 15ம் தேதி முதல் நாளை (திங்கட்கிழமை) வரை குப்பையில்லா இந்தியா பிரச்சாரம் நடைபெறுகிறது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், உயிரியல் பூங்காக்கள் போன்ற இடங்களுக்கு மக்கள் அடிக்கடி வரும் இடங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது.
அவர் கூறியது இதுதான்.
Discussion about this post