WhatsApp Channel
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனாவில் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியதாவது;
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துகள். ஆடவருக்கான உயரம் தாண்டுதல் T63 இல் வெள்ளிப் பதக்கம் அவரது அபாரமான திறமைக்கும் உறுதிக்கும் ஒரு சான்றாகும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.” அதில் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post