WhatsApp Channel
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக கிர்கிஸ்தான் சென்றுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக நேற்று கிர்கிஸ்தான் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிர்கிஸ்தான் தலைமையில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 22வது அரசுத் தலைவர்களின் கூட்டத்திற்கு இந்தியக் குழுவை வழிநடத்தும் வகையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கிர்கிஸ்தான் சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது, SCO உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் கிர்கிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களை அவர் சந்தித்தார். அவர் பேசுவார்”.
கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நேற்று தொடங்கிய இந்த மாநாடு 2வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
Discussion about this post