WhatsApp Channel
நடப்பு ‘ரபி’ பருவத்தில் உர மானியமாக ரூ.22 ஆயிரத்து 303 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில், நடப்பு ‘ராபி’ பருவத்தில் (அடுத்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை) பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு மானியம் நிர்ணயம் செய்ய உரத்துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
‘ராபி’ பருவத்தில், சத்து அடிப்படையிலான மானியமாக, நைட்ரஜன் கிலோவுக்கு, 47 ரூபாயும், பாஸ்பரஸ், 20.82 ரூபாயும், பொட்டாஷ், 2.38 ரூபாயும், கந்தகத்திற்கு, 1.89 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
22,303 கோடி
அதன்படி, ‘ரபி’ பருவத்தில், பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு, மானியம், 22 ஆயிரத்து 303 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது. ‘கரீப்’ பருவத்தில் உர மானியமாக ரூ.38 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. சர்வதேச அளவில் விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி பழைய விலைக்கே உரம் கிடைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பழைய விலை
அதன்படி, டி.ஏ.பி. உரம் பழைய விலையில் 50 கிலோ மூடை ரூ.1,350க்கு கிடைக்கும். NPK உரமும் பழைய விலையான மூட்டை ரூ.1,470க்கு கிடைக்கிறது.
எஸ்எஸ்பி (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்) உரம் ஒரு மூட்டைக்கு சுமார் ரூ.500 செலவாகும். எம்.ஓ.பி. உரத்தின் விலை ரூ.1,700ல் இருந்து ரூ.1,655 ஆக குறையும்.
விவசாயிகளுக்கு நியாயமான விலையில் போதுமான உரங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். கடந்த நிதியாண்டில் உர மானியமாக ரூ.2 லட்சத்து 55 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது என்றார்.
Discussion about this post