WhatsApp Channel
கத்தாரில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தாரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உளவு பார்த்த குற்றச்சாட்டில் 8 இந்தியர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தண்டனையை அறிந்த இந்திய அரசு அதிர்ச்சி அடைந்தது. மேலும் 8 முன்னாள் கடற்படை வீரர்களை விடுதலை செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 8 இந்தியர்கள் பணிபுரிந்த நிறுவனம் நீர்மூழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் ஈடுபட்டது.
Discussion about this post