WhatsApp Channel
இந்தியாவின் வான் பாதுகாப்பு கருவியை பலப்படுத்துமாறு விமானப்படை அதிகாரிகளை ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 2 நாள் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இதை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.
இந்திய ராணுவ தளபதி அனில் சவுகான், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விமானப்படையின் போர் திறனை வலுப்படுத்தும் நோக்கில் விமானப்படையின் எதிர்கால திட்டங்கள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சீனா மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைப் பாதுகாப்பு நிலவரம் குறித்து விரிவான ஆய்வு நடத்தி வருகின்றனர். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்தும் விவாதிக்கின்றனர்.
புதிய சவால்கள்
மாநாட்டை தொடங்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
உலகளாவிய பாதுகாப்பு சூழ்நிலையில் புதிய சவால்கள் தோன்றியுள்ளன. அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.
வான்வழிப் போரில் புதிய பாணிகள் பின்பற்றப்படுகின்றன. எனவே இந்தியாவின் வான் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆளில்லா விமானங்களின் பயன்பாடும் அதிகரிக்க வேண்டும்.
ஆயத்தமாக இரு
எந்தவொரு செயலுக்கும் தயாராக இருங்கள். முப்படைகளும் இணைந்து கூட்டு நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். வேகமாக மாறிவரும் புவி-அரசியல் சூழ்நிலையை பகுப்பாய்வு செய்யுங்கள். அவற்றை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் செயல்படுத்தவும்.
சமீபத்தில், இமாச்சலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் போன்ற மாநிலங்களில் பேரிடர்களின் போது விமானப்படையின் சிறப்பான நிவாரணப் பணிகளுக்காகப் பாராட்டப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
Discussion about this post