WhatsApp Channel
இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நல்ல பலனைத் தந்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியில் யோகி ஆதித்யநாத் உள்ளார். இந்த மாநிலத்தில் இதுவரை 6 ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக யாரும் பதவி வகித்ததில்லை. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் இந்த சாதனையை யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்றத் தேர்தலுக்கு நீட்டிக்கும் வகையில் பல புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில், இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நல்ல பலனைத் தந்துள்ளது என்றார்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்த காலோ இந்தியா திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த முறை உத்தரபிரதேசத்துக்கு ரூ.503 கோடி ஒதுக்கப்பட்டது. இது தவிர, மாநில அரசு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த சில தனித் திட்டங்களை உருவாக்கி, அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 21 வீரர்கள் பதக்கம் வென்றனர். இதுகுறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘‘இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் நல்ல பலனைத் தந்துள்ளன.
தொடர்ந்து, “”பட்டி விஹார் காலனியில், விரைவில், 6.18 கோடி ரூபாய் மதிப்பில், மினி விளையாட்டு மைதானம் கட்டப்படும். இதற்கு அடிக்கல் நாட்டினேன். 6 ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதி எப்படி இருந்தது என்பது, அனைவருக்கும் தெரியும். மிகவும் பதற்றமான பகுதி. சண்டைகள் மற்றும் சர்ச்சைகள் நிறைந்த பகுதிகள்.
ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. உத்தரபிரதேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் விளையாட்டு மைதானங்களை கட்டி வருகிறோம். இது இளைஞர்களை விளையாட்டை நோக்கி அழைத்துச் செல்கிறது. 72 கோடி மதிப்பிலான 42 வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன். இதுதவிர மாநகரில் 6 இடங்களில் திருமண மண்டபங்கள் கட்ட ஆணை வழங்கியுள்ளேன். திருமண மண்டபங்கள் இன்று ஏழை மக்களின் கனவாக உள்ளது. இதை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது,” என்றார்.
Discussion about this post