ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மொழி குறித்து கருத்து தெரிவித்தார்.
ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய அவர், மொழி என்பது தகவல் தொடர்புக்கான கருவியாக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், அறிவு வளர்ச்சிக்கு மொழியே பிரதான காரணம் அல்ல என்றும் தெரிவித்தார்.
உலக அளவில் முன்னேறியவர்கள் தங்களது தாய்மொழியில் கல்வி கற்றவர்களே என்றும், தாய்மொழியில் கல்வி பெறுவது எளிமையானது என்றும் அவர் தெரிவித்தார்.
மொழி எந்த வகையிலும் பகைமைக்கு காரணமாக இருக்கக்கூடாது என்றும், நாட்டில் ஹிந்தியும், சர்வதேச ரீதியில் ஆங்கிலமும் பயன்பாட்டில் உள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும், மொழியை அரசியல் கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், பல மொழிகளை கற்றுக்கொள்வது அனைவருக்கும் பயனளிக்கும் எனவும் சந்திரபாபு நாயுடு வலியுறுத்தினார்.