அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம், என்ஐஏ அதிகாரிகள் தினமும் 10 மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2008 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் பயங்கரவாதி தஹாவூர் ராணா, கடந்த 9 ஆம் தேதி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் தினமும் 8 முதல் 10 மணி நேரம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
. பயங்கரவாதி தஹாவூர் ராணா விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், அவர் சார்பாக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்றும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது வெளிச்சத்திற்கு வரும் பல்வேறு முக்கிய தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.