மும்பையின் மல்வானி பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பையின் மல்வானி பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தால் இறப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இடிந்து விழுந்த கட்டிடத்திற்கு அருகிலுள்ள 3 மாடி கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்ததால், அதில் தங்கியிருந்த அனைவரும் வேறு இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post