சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மேற்கு வங்கத்திலும் பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் ஏற்கனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வும் ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்வது குறித்து அந்தந்த மாநிலங்கள் ஆலோசித்து முடிவெடுத்து வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து மேற்குவங்க மாநிலத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகம், புதுவை, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் மாநிலங்களில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post