சட்டமன்ற பொது தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு திமுக ஆட்சி அமைந்து ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று கொண்டார், பொறுப்பேற்றது முதல் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் என்னென்ன வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததோ அதை செய்யாமல் மக்களை எமாற்றி வருகிறது, திமுக. எதிர்க்கட்சியாக இருக்கும் நேரத்தில், ஊரடங்கு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயல் எனவும் கரோனவை எதிர்கொள்ள ஊரடங்கு தீர்வு இல்லை எனவும் திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது பேசியது.
மேலும் மாதம் 5 ஆயிரம் வழங்கவேண்டும் எனவும்,ஊரடங்கு காலத்தில் மின் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும் எனவும் கரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களுக்கு 1 கோடி கொடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய திமுக தான் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில் அப்படியே தனது வாக்குறுதி கோரிக்கைகளை குப்பையில் போட்டு மிதித்து விட்டு ஊரடங்கை தொடர்ந்து நீட்டிக்கிறது ஆனால் தினசரி கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டி தான் செல்கிறது.
இந்த நிலையில் தமிழக அரசியல் பொறுப்பை இதுநாள் வரை கவனித்து வந்த மேலிட பொறுப்பாளர்களை நேரில் அழைத்து டெல்லி பாஜக தலைமை கடுமையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளது, தமிழகத்தில் என்ன நடக்கிறது, ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஆளும் கட்சி கேட்கும் கோரிக்கைகளை மத்திய அரசு என்ற முறையில் அனைத்தையும் செய்து கொடுக்கிறோம் அது மக்களுக்கு எடுத்து செல்ல படுகிறதா?
முன்பு ஆக்சிஷன் பற்றா குறை என செய்தி வந்ததே தற்போது எங்காவது அப்படி செய்திகள் வருகிறதா? மின்னல் வேகத்தில் ஆக்சிஷன் உற்பத்தி செய்து தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தோம் அதில் தமிழகமும் ஒன்று, மத்திய அரசு செய்த உதவி குறித்து இதுவரை பொதுமக்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா?
தடுப்பூசியை வீணாக்கிய மாநிலங்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் தமிழகம் உள்ளது தடுப்பூசி தட்டுப்பாடு என மத்திய அரசை குறை சொல்லும் திமுக மீது நேரடியாக கேள்வி எழுப்ப இந்த ஒருகாரணம் போதாதா?
கோவை பகுதிக்கு முறையாக தடுப்பூசி செல்லவில்லை என பொதுமக்கள் போராடும் நிலை உள்ளது, தமிழகத்தில் சென்னையை தவிர எங்குமே முறையாக தடுப்பூசி விநியோகம் செய்யவில்லை என பொதுமக்களே போராடும் நிலை உள்ள நிலையில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என தமிழக பாஜக பொறுப்பாளர்களை வெளுத்து எடுத்து இருக்கிறார்கள் டெல்லி. தலைமை.
விரைவில் தமிழக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் எனவும், தற்போதைய தமிழக தலைமை மீது டெல்லி தலைமை கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது மேலும் கூட்டணி பேச்சுவார்த்தையில் பல்வேறு குளறுபடிகள் நடந்தது குறித்தும் விரைவில் ஆய்வு நடத்தவும் இருக்கிறார்களாம்.
Like this:
Like Loading...
Related
Discussion about this post