தாய்லாந்தின் ஓபல் சுச்சாதா சுவாங்ஸ்ரீ உலக அழகியாக தேர்வு

0

ஹைதராபாத்தில் நடைபெற்ற 72-வது உலக அழகி போட்டியின் இறுதிக்கட்டம் நேற்று நடத்தப்பட்டது. இந்த விழாவில், தாய்லாந்தை சேர்ந்த ஓபல் சுச்சாதாசுவாங்ஸ்ரீ உலக அழகி பட்டம் வென்றார். அவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடத்தை அணிவித்து கவுரவம் செய்தார்.

இந்த போட்டியில் எத்தியோப்பியாவின் ஹாசெட் டெரிஜி இரண்டாவது இடத்தையும், போலந்தைச் சேர்ந்த மஜா க்ளாஜ்தா மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர். ஓபல், 2024 ஆம் ஆண்டின் மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து பட்டத்தை வென்றிருந்தார். இதைத் தொடர்ந்து, மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடம் பெற்றுள்ளார். ஏற்கனவே, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் யூனிவர்ஸ் தாய்லாந்து போட்டியிலும் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார். 2003 ஆம் ஆண்டு பிறந்த இவர், அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here