ஆந்திர மாநிலத்தில் உள்ள கொண்டபல்லி என்ற ஊர், மர பொம்மைகளுக்குப் புகழ்பெற்றது. தற்போது அங்குள்ள சிற்பக் கலைஞர்கள், களிமண் விநாயகர் சிலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்காக, இவ்வருடம் முதல் சிலைகள் அனுப்பப்படவுள்ளன. இந்த சிலைகள் கங்கை நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்படும் களிமண்களால் தயாரிக்கப்படும். இதற்கான ஆர்டர்களை அந்நாட்டு தெலுங்கு சமூகங்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, 1 அடி முதல் 3 அடி உயரம் வரை கொண்ட சிலைகள், முத்தும் பலவித வர்ண கற்களும் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு, ஏற்றுமதிக்காக தயாராகின்றன.