ராஜஸ்தானில் நபர் ஒருவர் தனது மனைவியை கோடாரியால் வெட்டி அவரின் சடலத்தை தெருவில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 வயதான சுனில் வால்மீகி என்ற நபர் ராஜஸ்தானில் உள்ள தனது வீட்டில் 35 வயதான சீமா என்ற தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், மாலை நேரத்தில் சுனில் வால்மீகி , சீமா ஆகியோருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முத்தி போன நிலையில் வால்மீகி தன்னுடைய மனைவியை கோடாரியால் தாக்கியுள்ளார்.
பிறகு அவரது உடலை 70முதல் 80 கிலோ மீட்டர் வரை தெருவில் இழுத்துச் சென்றதை கண்டு மக்கள் பீதியடைந்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ராமபுர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வால்மீகி தன்னுடைய தவறை ஒப்புகொண்டதாக போலீசார் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுடைய இந்த வாக்குவாதத்தின் போது அவர்களது ஒன்பது மாத குழந்தைக்கு காயம் ஏற்பட்டு புதன்கிழமை மருத்துவ மனையில் அனுமதிக்கபப்ட்டார். இதனை தொடர்ந்து தற்போது அந்த குழந்தை இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மீட்கப்பட்ட அந்த பெண்ணின் உடலையும் குழந்தையின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
Discussion about this post