மியூகோமைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பண்ணை கோழிகள் மூலம் பரவும். அதன் உணமைதன்மை என்ன என்பது பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் என அனைத்து முன்கள பணியாளர்களும் தொடர்ந்து இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் கருப்பு புஞ்சை எனப்படும் “மியூகோமைகோஸிஸ்” நோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்களுக்கு கூடுதல் சவால் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் மருத்துவ வல்லுனர்கள் இந்த நோய் பற்றி கூறும் பொழுது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளிகளில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளின் விளைவு தொடர்ந்து நான்கு வாரங்கள் வரை இருக்கும். இந்த நேரத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட அதிக ஆபத்து உள்ளது. எனவே ஈரப்பதமான மற்றும் தூசி நிறைந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற இடங்களுக்கு கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சில வாரங்களுக்கு செல்லக்கூடாது அது அவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.
மேலும் கோவிட் -19 நோயாளிகளிடையே நோய்த்தொற்று நீடித்த நோயுற்ற தன்மை மற்றும் இறப்புக்கு வழிவகுக்கிறது என்று கூறி, மியூகோமைகோசிஸை ஒரு தொற்றுநோயாக அறிவிக்க மத்திய அரசு ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. “தொற்று நோய்கள் சட்டத்தின்” கீழ் பட்டியலிடுமாறு மாநிலங்கள் மற்றும் யூ.டி.க்களை சுகாதார அமைச்சகம் கேட்டுள்ளது.
இதற்கிடையில் இது பண்ணை கோழிகள் மூலம் கருப்பு பூஞ்சை பரவக்கூடும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிறது. “பண்ணை கோழிகளால் கருப்பு பூஞ்சை பரவுகிறது. தயவுசெய்து சில நாட்கள் பண்ணை கோழிகளை சாப்பிட வேண்டாம். பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறிவருகின்றனர். அந்த பதிவில் எந்த உண்மையும் இல்லை. “நோய்த்தொற்று கோழிகளிலிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை” என்று PIB Fact Check உண்மை சரிபார்ப்பு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. மேலும் இது போன்ற பொய்யான தகவல்களை பரபரப்ப வேண்டாம் என கூறியுள்ளது.
Discussion about this post